விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதோடு டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வரும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் பாரதியாக அருண்பிரசாத், கண்ணம்மாவாக வினுஷா தேவி, வெண்பாவாக ஃபரீனா ஆசாத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதில் பாரதி கண்ணம்மா என்ற மெயின் ரோலை விட வெண்பா ரோலுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது போன்று கதை அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெண்பா கேரக்டருக்கு நடிகை ஃபரீனா ஆசாத் உயிர் கொடுத்துள்ளார் என்றே சொல்லலாம். மேலும் வில்லியாக இருந்தாலும் வெண்பா கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த சீரியலுக்கு தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

அதனால் ஃபரீனா ஆசாத் தான் கர்ப்பமாக இருந்த காலத்தில் அவர் சீரியலை விட்டு வெளியேறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், ஃபரீனா ஆசாத் டெலிவரிக்கு முன்பு வரை பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தார்.

டெலிவரிக்கு சென்றபோது கூட அவரது கேரக்டர் ஜெயிலுக்கு சென்றுவிட்டது போல் காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் டெலிவரி முடிந்து வரும்போது ஜெயிலில் இருந்து விடுதலையாகி வருவது போல் காட்சிகள் வைக்கப்பட்டது.

ஆனால் தற்போது சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் சற்று சறுக்கலை சந்தித்து வரும் நிலையில், பீஸ்ட் படத்தை அப்படியே ரீக்ரியேட் செய்துள்ளதாக விமர்சனங்களும் எழுந்துள்ளது. அதே சமயம் வெண்பாவுக்கும் முன்புபோல் அதிக முக்கியத்துவம் இல்லை.

சீரியல் எப்போது பரபரப்பான பாதைக்கு திரும்பும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஃபரீனா அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் கிராமத்து கெட்டப்பில் சும்மா ஹன்சிகா மாதிரி இல்லை என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil