scorecardresearch

உங்களையா வேண்டாம்னு சொன்னாரு பாரதி… வில்லி வெண்பாவின் நியூ போட்டோஸ்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல்களில ஒன்று பாரதி கண்ணம்மா.

உங்களையா வேண்டாம்னு சொன்னாரு பாரதி… வில்லி வெண்பாவின் நியூ போட்டோஸ்

பாரதி கண்ணம்மா வில்லி வெண்பா கேரக்டரில் நடித்து வரும் ஃபரீனா ஆசாத் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முக்கிய சீரியல்களில ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில், வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருபவர் ஃபரீனா ஆசாத்.

தனது ஒருதலை காதல் காரணமாக பாரதி கண்ணம்மாவை பிரித்து எப்படியாவது பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று காய் நகர்த்தி வந்தார். இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் இவருக்கு விமர்சனங்கள் எழுந்தாலும், இவர் இல்லை என்றால் பாரதி கண்ணம்மா இல்லை என்று சொல்லலாம்.

இடையில் இவர் பிரசவத்திற்க்காக சென்றிருந்த போது இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் கடுமையான சரிவை சந்தித்து. அந்த நேரத்தில் வெண்பா கேரக்டரை வெறுப்பவர்கள் கூட வெண்பா எப்போது உள்ளே வருவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.

அந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ள .பரீனா ஆசாத் பாரதி கண்ணம்மா மட்டுமல்லாமல், கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் தொடரில் பவானி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். பாரதி கண்ணம்மாவில் வில்லி என்றாலும், அபி டெய்லர் தொடரில், பாசிட்டீவ் கேரக்டரில் நடித்து வந்தார். நன்றாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து ஃபரீனா ஆசாத் திடீரென விலகுவதாக அறிவித்தார்.

அதன்பிறகு தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கவனம் செலுத்தி வரும் பரீனா ஆசாத் வெண்பா கேரக்டர் செய்யும் சூட்சமத்தற்காக விமர்சனங்களையும் பெற்று வருகிறார். தற்போது இவரின் சூழ்ச்சிகள் அனைத்தும் தெரிந்துவிட்ட நிலையில் ஜெயிலுக்கு சென்றுவிட்டார்.

ஆனால் ஜெயிலில் பைத்தியம்போல் நடித்து அனைவரையும் ஏமாற்றி மருத்துவமனைக்கு அனுமதிக்கலாம் என்று சொல்ல வைத்து தற்போது மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரீனா ஆசாத் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress farina azad photo gallery update in tamil