New Update
/indian-express-tamil/media/media_files/nRT99a2NfZqdILk1nvaT.jpg)
சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத்
சின்னத்திரையில் நல்ல வரவேற்பை பெற்று வந்த பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஃபரீனா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகிறது.
சீரியல் நடிகை ஃபரீனா ஆசாத்
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முக்கிய சீரியல்களில ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில், வெண்பா என்ற வில்லி கேரக்டரில் நடித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர் ஃபரீனா ஆசாத்.
தனது ஒருதலை காதல் காரணமாக பாரதி கண்ணம்மாவை பிரித்து எப்படியாவது பாரதியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பல சதிவேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து வரும் இவருக்கு விமர்சனங்கள் எழுந்தாலும், இவர் இல்லை என்றால் பாரதி கண்ணம்மா இல்லை என்று நிலையும் இருந்தது.
இடையில் இவர் பிரசவத்திற்க்காக சென்றிருந்த போது வெண்பா கேரக்டரை வெறுப்பவர்கள் கூட வெண்பா எப்போது உள்ளே வருவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.
பரீனா ஆசாத் பாரதி கண்ணம்மா மட்டுமல்லாமல், கலர்ஸ் தமிழின் அபி டெய்லர் தொடரில் பவானி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். பாரதி கண்ணம்மாவில் வில்லி என்றாலும், அபி டெய்லர் தொடரில், பாசிட்டீவ்
நன்றாக சென்றுகொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து ஃபரீனா ஆசாத் திடீரென விலகுவதாக அறிவித்தார். அதன்பிறகு தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் கவனம் செலுத்தி வந்தார்.
ஒரு கட்டத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த தொடங்கப்பட்ட இந்த சீரியலின் 2-வது சீசனும் முடிவுக்கு வந்தது. இதனால் தற்போது ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுப்பாராக மாறியுள்ள ஃபரீனா ஆசாத், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.