தண்ணீருக்கு அடியில் தேவதை போல... பாரதி கண்ணம்மா வெண்பா பிரக்னன்சி வீடியோ ஷூட்

Tamil Serial News : பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பா தற்போது வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

Tamil Serial News : பாரதி கண்ணம்மா சீரியலின் வில்லி வெண்பா தற்போது வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
தண்ணீருக்கு அடியில் தேவதை போல... பாரதி கண்ணம்மா வெண்பா பிரக்னன்சி வீடியோ ஷூட்

Bharathi Kannamma Farina PhotoShoot Viral : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில ஒன்று ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரப்பேற்பை பெற்று வரும் இந்த சீரியலின் சமீப எபிசோடுகள் ரசிகள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. மேலும் வார இறுதியில் வெளியாகும டிஆர்பி ரேட்டிங்கில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு தொடர்ந்து சிறப்பான இடம் கிடைத்து வருகிறது.

Advertisment

இந்த சீரியலில் வில்லி வெண்பா கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம். இந்த சீரியலில் இந்த கதாப்பாத்திரம் செய்யும் வில்லத்தனத்தை பார்த்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் திட்டியுள்ள நிகழ்வும் நடைபெற்றுள்ளது. அநத வகையில் பாப்புலரான இந்த கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஃப்ரீனா. தொடக்கத்தில் தொகுப்பளினியாக சின்னத்திரைக்கு வந்த இவர் தற்போது பாப்புலரான சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ரகுமான் என்பவரை திருமணம் செய்து ஃப்ரீனா கடந்த வாரம் தான் ககர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். அதற்காக இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், அடுத்த ஓரிரு நாட்களில் இவர் தனது வயிற்றில் மருதாணி கோலம் போட்டது பெரும் வைரலாக பரவியது. கர்ப்பத்திற்காக வாழ்த்து சொன்ன ரசிகர்கள் சிலர் மருதாணி கோலத்திற்கு சராமாரியான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனது.

Advertisment
Advertisements

அதில் ஒருவர் ‘உனக்கெல்லாம் கடவுள் இப்படி ஒரு பாக்யத்த கொடுத்திருக்கார் பாரு த்தூ, பாதியிலேயே சந்தோசம் போய்ட போது ‘என்று மோசமாக கமன்ட் செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஃப்ரீனா மற்றொரு போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இதில் தண்ணீருக்கு அடியில் போட்டோ ஷூட் எடுத்து அதனை தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே இவரின் மருதாணி போட்டோஷூட் பெரும் வைரலாக பரவியதை தொடர்ந்து பலரும் விமர்சனங்களை பதிவிட்ட நிலையில், தற்போது தண்ணீருக்கு அடியில் எடுத்துள்ள போட்டோஷூட்க்கு ரசிகர்கள் என்ன ரியாக்ஷன் கொடுக்க போகிறார்கள் என்பது குறித்து பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Farina Azad

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: