புகைப்படத்தை விமர்சனம் செய்த ரசிகர் : தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த வில்லி வெண்பா

Serial News In Tamil : கர்ப்பமாக இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்த நேரத்தில் திடீரென ஒரு போட்டோவை வெளியிட்ட ஃபரீனாவுக்கு ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்தனர்

Tamil Seria News Update : சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி வரும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலின் சமீபத்திய எபிசோடுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சீரியலில் வில்லி வெண்பா கேரக்டரில் நடித்து புகழ் பெற்றவர் ஃபரீனா. இந்த கேரக்டருக்காக மக்கள் இவரை கட்டபடி திட்டினாலும் அதுவே இந்த கேரக்டரின் வெற்றியாக உள்ளது.

இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்ட ஃபரீனா தான் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதனால் மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். வெண்பா கேரக்டருக்காக அவரை திட்டியவர்கள  கூட இந்த மகிழ்ச்சியான செய்திக்கு தங்களது வாழத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்த வாழ்த்துக்கள் குவிந்து வந்த நேரத்தில் திடீரென ஒரு போட்டோவை வெளியிட்ட ஃபரீனாவுக்கு ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்தனர். இதில் கர்ப்பமாக உள்ள அவர் தனது வயிற்றில் மருதாணியில் டாட்டு வரைந்து அந்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படம் வைரலான நிலையில், இப்படித்தான் உடலை வெளியுலகிற்கு காட்டுவீர்களா என்று ரசிகர் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார்.

ரசிகரின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்ட அவர், உண்மையான எதிர்மறை குணம் உள்ளவர்கள் மட்டுமே அதிகம் உள்ளனர். அவர்களே என்னை எதிர்மறையாக விமர்சிக்கின்றனர் என்று பதிலடி கொடுத்துள்ளார். இதில் மற்றொரு ரசிகர் ஒருவர் கடவுள் எவ்வளவு ஒரு அழகான விஷயத்தை ஒரு அசிங்கத்திற்கு கொடுத்துள்ளார். என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார். இதற்கு கூலாக பதில் சொன்ன ஃபரீனா, இந்த மாதிரி கமெண்ட் பண்றீங்களே இதில் இருந்தே தெரிகிறது நீங்கள் யார் என்று.. உங்க கண் அசிங்கம் உங்க மனசு அசிஙகம் என்று பிதிவிட்டுள்ளார்.

இதற்கு மற்றொருவர் உனக்கெல்லம் கடவுள் இப்படி ஒரு பாக்கியத்தை கொடுத்திருக்காரு பாதியிலே இந்த சந்தோஷம் போகனும் என்று கமெண்ட் கொடுத்துள்ளார். இதற்கு பதில் அனுப்பிய ஃபரீனா? என்னால முடியலங்க.. இவர்களை சமாளிக்க முடியவில்லை. நீங்க எனக்கு உதவி செயங்க இவர்கள் அனைவரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது இந்த பதில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவுக்கு வெண்பாவின் ரசிகர்கள் இதை எல்லாம் கண்டுக்காதீங்க அக்கா… இத விட்டுட்டு போய்கிட்டே இருங்க இவர்களுக்கு நீங்க ரிப்ளே பண்ண வேண்டிய அவசியமே இல்லை என்று பதிவிட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress farina reply to fan for troll comments

Next Story
கிளாசி, ஸ்டைலிஷ் லுக்.. மௌனராகம்2 ஸ்ருதி லேட்டஸ்ட் ஃபோட்டோஷூட்!mounaragam2 shilpa
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express