ஈரமான ரோஜாவே சீரியல் மூலம் பிரபலமான நடிகை கேப்ரியல்லா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி மூலம் டான்ஸராக பிரபலமானவர் கேப்ரியல்லா. பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்த இவர், 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் கேப்ரியல்லா, விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.

தொடர்ந்து விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்ட கேப்ரியல்லா தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

விஜய் டிவியில் ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி வரவேற்பை பெற்று வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்ப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil