விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி தற்போது சீரியல் நடிகையாக வலம் வருபவர் கேப்ரியல்லா. இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Advertisment
விஜய் டிவியின் ஜோடி நிகழ்ச்சி மூலம் டான்ஸராக பிரபலமானவர் கேப்ரியல்லா. பின்னர் விஜய் டிவியின் 7C சீரியலிலும் நடித்த இவர், 3, அப்பா, சென்னையில் ஒரு நாள் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
Advertisment
Advertisements
பின்னர் கேப்ரியல்லா, விஜய் டிவியின் மிகப்பெரிய ஹிட் ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 ஆவது சீசனில் கலந்துக் கொண்டு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றார்.
தொடர்ந்து விஜய் டிவியில் முரட்டு சிங்கிள்ஸ், பிக் பாஸ் ஜோடிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொண்ட கேப்ரியல்லா தற்போது ஈரமான ரோஜாவே சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஏற்கனவே வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகிய ‘ஈரமான ரோஜாவே’ சீரியலின் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பிக் பாஸ் பிரபலங்கள் பலரும் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று வரும் நிலையில், கேப்ரியல்லா சீரியல் ஹீரோயினாகி வரவேற்பை பெற்று வருகிறார். உள்ளார்.
ஈரமான ரோஜாவே முதல் சீசனில் பவித்ரா மற்றும் திரவியம் முன்னனி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil’’