பிக்பாஸ் நிகழ்ச்சி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் மூலம் பிரபலமான நடிகை கேப்ரியல்லா, தற்போது சன்டிவி சீரியலில் நடித்து வரும் நிலையில், இந்த சீரியலின் ஒரு காட்சிக்காக ரவுடிகளுடன் சண்டை போடுவது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கததில் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியின் பிரமாண்டமான ரியாலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை கேப்ரியல்லா. நடன நிகழ்ச்சிகளிலும், திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் கேப்ரியல்லா நடித்துள்ள இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ஈரமான ரோஜாவே' இரண்டாவது சீசனில் நடித்தார். இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து விஜய் டிவியின் புதிய சீரியலில் கமிட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது.
சன் டிவியில் புதியதாக தொடங்க உள்ள சீரியலில் கேப்ரியல்லா நாயகியாக நடிக்க உள்ளதாகவும், ஹீரோவாக நடித்த ராகுல் ரவி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. அதன்படி சன்டிவியின் புதிய சீரியலான மருமகள் சீரியலில் நாயகியாக கேப்ரியல்லா நடித்து வருகிறார். இந்த சீரியல் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்து வரும் நிலையில், டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கேப்ரியல்லா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது மருமகள் படப்பிடிப்பில் தளத்தில் இருந்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். கதைப்படி, சீரியலில், சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட நிலையில், இதில் கேப்ரியல்ல, ரவுடிகளுடன் சண்டை போடுகிறார்.
இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், சாதுவாக இருந்த கேப்ரியல்லா இப்படி ஆக்ரோஷமாக மாற என்ன காரணம் என்று தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். மேலும், தற்போது சினிமாவை போலவே சீரியலிலும் சண்டைக்காட்சிகள் அதிகம் இருக்கிறது பதிவிட்டு வருகின்றனர். கங்கா சந்திரமுகியாக மாறிய தருணம் என்று ஒரு ரசிகர் பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“