/tamil-ie/media/media_files/uploads/2021/05/Sundari-1.jpg)
சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சுந்தரி. டிக்டாக் மூலம் பிரபலமான கேப்ரியல்லா இந்த சீரியல் மூலம் சின்னதிரையில் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே நயன்தாராவின் ஐரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த அவர், தற்போது என்4 என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தில் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
மேலும் சினிமாவில் சாதிக்க உடல்நிறம் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ள இவர், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவாகி ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளார். அப்போது இவர் ரஹ்மானுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி இணையத்தில் வைராகியது. இந்நிலையில் தமிழகத்தீல் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில, சமீபத்தில் கேப்ரியல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு தன்னை தானே தனிமைபடுத்திக்கொண்ட அவர், தற்போது அதில் இருந்து குணமாகி வருகிறார்.
ஆனால் அவர் உயிருக்கு போரடி வருவதாகவும், இதனால் சுந்தரி சீரியல் நிறுத்தப்படுவதாகவும், யூடியூபில் சிலர் வீடியோ வெளியிட்டு உள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், கோபமான கேப்ரியல்லா, இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு "நான் நல்லா தான் இருக்கும். டைட்டில் பாரு உயிருக்கு போராடறாங்களாம். ஐம் குட் (Am Good_ உடம்பு சரி ஆகிட்டு இருக்கு" என என பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.