scorecardresearch

திருமண கோலத்தில் சீரியல் நடிகை : ரசிகர்களை குழப்பும் போட்டோஷூட் #PhotoGallery

Tamil Serial Update : கேப்ரியல்லா கல்யாண கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திருமண கோலத்தில் சீரியல் நடிகை : ரசிகர்களை குழப்பும் போட்டோஷூட் #PhotoGallery

Tamil Serial Actress Gabriella Sellus Photo gallery : சமூகவலைதளங்கள் மூலம் பிரபலமாகி தற்போது தமிழ் சின்னத்திரையின் முன்னணி நாயகியாக வலம் வருபவர் கேப்ரியல்லா. டிக்டாக் வீடியோ மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவர், ஐரா படத்தில் இளம்வயது நயன்தாராவாக நடித்து பிரபலமானார். அதன்பிறகு என்4 கேடி கருப்புதுரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள இவர், சன்டிவியின் சுந்தரி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுமானார்.

தற்போது இந்த சீரிலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவதை தொடர்ந்து வரும் கேப்ரியல்லா சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டு தமிழ் தொடர்பான ஆல்பம் பாடலை பாடியிருந்தார்.

மேலும் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இவரின் ஃபாலோயராக இருக்கிறார். இப்படி தனது தனித்தன்மையுடன் பிரபலமான கேப்ரியல்லா தற்’போது சமூக வலைதளங்களிலும் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இதில் பிரபலங்களுடன் எடுத்துக்கொள்ளும் போட்டோஸ், டப்ஸ்மாஷ், சுற்றுலா வீடியோக்கள் உள்ளிட்ட பல பதிவுகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் கல்யாண கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள் இது என்ன பெயிண்டிங்கா இல்ல போட்டோஷூட் தானா என்று கேட்டு வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress gabriella sellus photogallery going on viral