சன்டிவியின் சுந்தரி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை கேப்ரியல்லா செல்லூஸ் நேற்று மே தினத்தை முன்னிட்டு நடிப்பு பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார்.
சமூக வலைதளமான டிக்டாக் மூலம் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர்களில் முக்கியமானவர் கேப்ரியல்லா. ரஜினியின் கபாலி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், தொடர்ந்து நயன்தாராவின் ஐரா, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
டிக்டாக் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதை வைத்து பட வாய்ப்பு பெற்ற கேப்ரியல்லா, அடுத்து சின்னத்திரை வாய்பினையும் பெற்றிருந்தார். இவரது நடிப்பில் வெளியான சுந்தரி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நடிப்புக்கு டஸ்கி ஸ்கின் ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்த கேப்ரியல்லா, சுந்தரி சீரியலின் 2-வது சீசனில் கலெக்டர் கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்று வருகிறது. இதனிடையே தன்னை போல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக நடிப்பு பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார் கேப்ரியல்லா. கேபி சினிமா ஃபேக்டரி தியேட்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நடிப்பு பள்ளியை மே தினத்தை முன்னிட்டு நேற்று திறந்துள்ளார்.
இதே பள்ளியில் நடிப்பு சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராகவும் தன்னை மாற்றிக்கொண்கொண்டுள்ளார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு வாழக்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ள கேப்ரியல்லாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பான வீடியோ பதிவை கேப்ரியல்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“