விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முதல் சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முதல் சீரியலின் 2-வது சீசன் ஒளிபரப்பை தொடங்கியுள்ளது. இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிகை காயத்ரி பிரியா நடித்து வருகிறார்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த 5 வருடமாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த அக்டோபர் 28-ந் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில், நேற்று முதல் (அக்டோபர் 30) பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரயலின் 2-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து தவிர மற்ற அனைவரும் புதுமுகங்களாக இருக்கும் இந்த சீரியலில் வடிவு என்ற கேரக்டரில் நடிகை காயத்ரி பிரியா நடித்து வருகிறார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், "பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீசன் 2 இல் நான் "வடிவு" என்ற கேரக்டரில் நடிக்கிறேன் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்! இந்தக் குடும்பத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நாங்கள் இந்தப் பயணத்தைத் தொடர்ந்து வெற்றியுடன் பயணிக்க நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த சீரியலில் ஸ்டாலின் முத்துவுடன், நிரோஷா, ராதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மேலும் வி.ஜே.கதிர்வேல் கந்தசாமி, வசந்த் வாசி மற்றும் ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சொந்த ஊரான குன்றக்குடியில் புகழ்பெற்ற மளிகைக் கடையான பாண்டியன் ஸ்டோர்ஸை நடத்தும் பாண்டியனின் மூன்று மகன்களைச் சுற்றி கதை நடக்கிறது.
நன்கு படித்த மற்றும் தைரியமான பெண்ணான தனலட்சுமி, தனது குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக சத்தியமூர்த்தியின் வாழ்க்கையில் நுழைந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்வது தான் சீரியலின் முழுக்கதை என்று தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“