அஜித் படத்தில் எண்ட்ரி… சின்னத்திரையின் பெஸ்ட் மாமியார்… காயத்ரி சாஸ்திரியின் வாழ்க்கை

Tamil Serial Update : இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் பெரிய ஹிட் அடித்த மெட்டி ஒலி சீரியலில் சரோ என்ற கதாப்பாத்திரம் மூலம் பிரபலமடைந்த காயத்ரி மும்பையில் பிறந்து வளர்ந்தவர்

Tamil Serial Actress Gayathri Lifestory : சின்னத்திரையில் பெஸ்ட் மாமியார் யார் என்று கேட்டால் கண்னை மூடிக்கொண்டு சொல்லிவிடால் ரோஜா சீரியலின் கல்பானா என்று. அந்த அளவிற்கு இந்த கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது. இந்த கேரக்டரின் முக்கியத்துவத்தை உணர்ந்து தனது இயல்பான் நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வென்றவர் காயத்ரி சாஸ்திரி. நாயன் நாயகி மட்டுமல்லாமல் துணை நடிகர்களுக்கும் முக்கியத்துவம அளித்து வரும் சின்னத்திரையில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள இவர், பாராட்டுக்களையும் பெற்று வருகிறார்.

இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் பெரிய ஹிட் அடித்த மெட்டி ஒலி சீரியலில் சரோ என்ற கதாப்பாத்திரம் மூலம் பிரபலமடைந்த காயத்ரி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். இவரது சகோதரர் சஞ்சய் கடந்த 1993-ம் ஆண்டு ரஜினிகாந்த் எழுத்து மற்றும் நடிப்பில் வெளியான வள்ளி படத்தில் வில்லனாக நடித்திருப்பார். அதன்பிறகு பல படங்களில் பிஸியாக நடித்து வந்த சகோதரரை பார்க்க சென்னை காயத்ரியை இயக்குநர் சுரேஷ் மேனன் இயக்கிய ‘பாசமலர்கள் படத்தில் நடிக்க வைத்தார்.’இந்த படத்தில் அரவிந்த் சாமி அஜித் ரேவதி ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

தொடர்ந்து விஜய்-அஜித் இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த இவர், தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பல படங்கில் நடித்தார். அதன்பிறகு படவாய்ப்பு குறைந்த போது சீரியல் பக்கம் திரும்பிய இவருக்கு மெட்டி ஒலி சீரியல் திருப்புமுணை கொடுத்து.  இந்த சீரியல் மூலம் இல்லதரசிகள் மத்தியில் பெயர் பெற்ற காயத்ரி, தமிழில் ‘மேகலா’, ‘தேவதா’ போன்ற பல சீரியலில் நடித்து வந்தார்.

சீரியலில் நடிக்கும்போது சின்னத்திரை இயக்குநர் ரவி என்பவரை திருமணம் செய்துகொண்ட காயத்ரிக்கு உடனாயடிகா குழந்தை பிறந்ததால் நடிப்பைக்கு பிரேக் விட்டார். இதனையடுத்து 3 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது சன்டிவி ரோஜா சீரியலின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். சீரியலில் தான் 2 மகன்களுக்கு அம்மா, மற்றும் ரோஜாவுக்கு மருமகள் என்று வயதானவராக நடித்தாலும் நிஜவாழ்க்கையில், காயத்ரிக்கு, 39 வயதான் ஆகிறது. அவரது மக்கள் இப்போதுதான் பள்ளிப்படிப்பை தொடங்கிள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress gayathri shastry life story in tamil update

Next Story
நடிகன் என்பதைவிட தமிழன் என்பதே பெருமை: சத்யராஜ்! பாகுபலி-2 வெளிவர சிக்கல் இல்லை!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com