/indian-express-tamil/media/media_files/gyV7eu0AQy9esHkieclP.jpg)
குடும்பத்துடன் காயத்ரி யுவராஜ்
சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயான பிரபல சீரயில் நடிகை காயத்ரி யுவராஜ் தற்போது புதுவீடு கட்டி குடியேறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரையின் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் தனது நடன திறமையை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த காயத்ரி யுவராஜ், தொடர்ந்து 2009-ம் ஆண்டு சன்டிவியின் தென்றல் தொடரில் நிலா என்ற கேரக்டரில் நடித்தார். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரலமான காயத்ரி, அடுத்து அழகி, பொன்னூஞ்சல், களத்துமேடு, மெல்ல திறந்தது கதவு உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருந்தார்
இதில் சரவணன் மீனாட்சி தொடரில் முத்தழகு கேரக்டரில் காயத்ரி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து, அரண்மனைக்கிளி, சித்தி 2 உள்ளிட்ட தொடர்களில் நடித்த காயத்ரி விஜய் டிவியின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடிகர் ராஜூவின் மனைவியாக நடித்திருந்தார். இந்த சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து, ஜீ தமிழின் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்து வந்தார். அப்போது தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த காயத்ரி அந்த சீரியலில் இருந்து விலகினார்.
கடந்த ஆண்டு இறுதியில் பெண் குழந்தை பெற்றெடுத்த காயத்ரி யுவராஜ், தனது பிறந்த நாளிலேயே தனது மகளின் பிறந்த நாளும் வருந்துள்ளது மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், தற்போது காயத்ரி மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார். புதிதாக வீடு கட்டிய அவர், தற்போது அந்த வீட்டில் குடியேறியுள்ளார். இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதலில் தனது கணவருடன் உற்சாகமாக காயத்ரி புது வீட்டில் அடியெடுத்து வைக்க, பின்னால் அவரது மகள் தனது தங்கையுடன் வீ்டிற்குள் நுழைகிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.