Advertisment

பிரேக் பிடிக்காத வண்டி... படப்பிடிப்பு தளத்தில் விபத்து : சீரியல் நடிகை காயம்

வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் இந்த சீரியலில், இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் நாயகனின் அப்பாவாக நடித்து வருகிறார்.

author-image
WebDesk
New Update
Siragadika Asai Meena

நடிகை கோமதி பிரியா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா படப்பிடிப்பின்போது, தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும், இது எனது முதல் விபத்து என்றும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே சமயம் குறுகிய காலத்தில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற சீரியல்களில், சிறடிக்க ஆசை சீரியலுக்கு முக்கிய இடம் உண்டு. வெற்றி வசந்த், கோமதி பிரியா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் இந்த சீரியலில், இயக்குனரும் நடிகருமான சுந்தர்ராஜன் நாயகனின் அப்பாவாக நடித்து வருகிறார்.

குடும்ப உறவுகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், அம்மாவுக்கு பிடிக்காத மகன் முத்து தனது வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனை மற்றும், அவருக்கு மனைவியாக வரும் மீனாவின் வாழ்க்கை தான் இந்த சீரியலின் கதை. ஓவியா என்ற சீரியல் மூலம் அறிமுகமான கோமதி பிரியா, அடுத்து விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரலமானார்.

அந்த சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளில் இருந்து சீரியல் வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் சிறகடிக்க ஆசை சீரியலின் மலையாள ரீமேக்கில் கோமதி பிரியா தான் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த சீரயலின் படப்பிடிப்பில் தனக்கு விபத்து ஏற்பட்டதாக கோபமதி பிரியா தெரிவித்துள்ளார். கதைப்படி, கோமதி பிரியா தனது தோழியாக நடிக்கும் ஒரு நடிகையுடன் பைக்கில் பயணம் செய்வது போன்ற ஒரு காட்சியில் நடிக்கும்போது, பைக் பிரேக் பிடிக்காததால், விபத்துக்குள்ளாகியுள்ளது. பெரிய அளவில் அடி இல்லாமல் சிறு காயத்துடன் கோமதி பிரியா தப்பியுள்ளார்.

இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கோமதி பிரியா, இது என் முதல் விபத்து என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்த வீடியோவில் கிராமத்தில் பாட்டி வீட்டில் இருக்கும் கிச்சன் போன்ற ஒரு இடத்தில் பாத்திரத்தில் பூவை கொட்டி சமைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இப்படித்தான் அனைவரையும் ஏமாற்றுகிறீர்களா என்று கேட்டு, வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actress Gomathi Priya
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment