scorecardresearch

பாடகி அவதாரம் எடுத்த பிரபல சீரியல் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்

Tamil Serial Update : பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்வுகளில் நடித்துள்ள கோமதி பிரியா, பின்னர் நடிப்புக்காக ஹைதராபாத் வரை சென்றுள்ளார்.

பாடகி அவதாரம் எடுத்த பிரபல சீரியல் நடிகை… குவியும் வாழ்த்துக்கள்

Serial Actress Gomathi Priya Song Update : சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகைகள் பலரும் நடிப்பு மட்டுமல்லாது திரைத்துறையில் பல பணிகளை மேற்கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமான நடிகை கோமதி பிரியா பாடகியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

கடந்த 1993 ஆம் ஆண்டு தமிழகத்தின் மதுரையில் பிறந்த கோமதி பிரியா சிறு வயதிலிருந்தே நடிப்பு மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி நிகழ்வுகளில் நடித்துள்ள அவர், பின்னர் நடிப்புக்காக ஹைதராபாத் வரை சென்றுள்ளார்.

அதன்பிறகு கடந்த 2018 முதல் 2020 வரை கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஓவியா என்ற தமிழ் சீரியல் மூலம் அவர் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு 2020 ஆம் ஆண்டு முதல் விஜய டிவியில் ஒளிபரப்பாகி வரும் வேலைக்காரன் என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது, ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வரும் இவருக்கு தமிழில் பெரிய வரவேற்பை கொடுத்த சீரியல்தான் விஜய் டிவியின் வேலைக்காரன். இந்த சீரியலில், வள்ளி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர், ஒரு ஸ்டுடியோவில் ஒரு பாடல் பதிவு செயவது போல் சில புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இந்த பதிவில், “யோ நண்பர்களே! ஆம், நான் பாடலைப் பாடினேன். புதிய முயற்சி (உண்மையில் எனக்கு ஏன் இந்த கொலவெறி கொலவெறி)” என்று பதிவிட்டுள்ளார்.  இந’த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் கோமதி பிரியாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் பாடிய பாடலை கேட்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று ஒரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில், இதயம் போன் இமோஜிகளை பதிவிட்டு வருகினறனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress gomathi priya new incarnation a singer

Best of Express