New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Gomathi-Priya.jpg)
நடிகை கோமதி பிரியா
விஜய்டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்த கோமதி ப்ரியா தெலுங்கிலும் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தொடரிலும் நடித்தார்.
நடிகை கோமதி பிரியா
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை கோமதி பிரியா சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை கோமதி ப்ரியா. மதுரையை சேர்ந்த இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு 10 மாதங்கள் சென்னையில் தான் துறை சார்ந்த வேலை பார்த்து வந்தார். அதன்பிறகு நடிப்பு மீது ஆர்வம் இருந்ததால் ஒரு ரியாலிட்டி ஷோவில் கெஸ்டாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
கலர்ஸ் தமிழ் டிவியின் ஓவியா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த தொடர் மூலம் ரசிகர்களிடம் நல்ல ரீச் ஆனார். அதனைத் தொடர்ந்து விஜய்டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்து வந்தார்.கோமதி ப்ரியா தெலுங்கிலும் ஹிட்லர் கேரி பெல்லம் என்ற தொடரிலும் நடித்தார். வேலைக்காரன் சீரியல் முடிந்துவிட்ட நிலையில், விஜய் டிவியின் புதிதாக தொடங்கப்பட்ட சிறகடிக்க ஆசை என்ற தொடரில் நடித்து வருகிறார்.
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கோமதி அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகள் கவனம் ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் தற்போது இவர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பாரம்பரிய வாகனமான மாட்டு வண்டி தற்போது அதிகமாக யாரும் பயன்படுத்தாத நிலையில், கோமதி பிரியா அதில் ஏறி பயணம் செய்துள்ளார்.
மாட்டுடன் இணைத்துள்ள கயிற்றை பிடித்தக்கொண்டு வண்டியில் கோமதி பிரியா நிற்க, அருகில் ஒருவரும் நிற்கிறார். வண்டியை ஓட்டுபவர் அமர்ந்திருக்கிறார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும்ட நிலையில், பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.