Serial Actress Haripriya Say About Her Life : சின்னததிரை பிரபலங்களாக விக்னேஷ் – ஹரிப்பரியா இருவரும் விவாகரத்து பெறுவதறகு சன்டிவி விஜே ஒருவர்தான் காரணம் என்று கூறப்படும் நிலையில், இதற்கு நடிகை ஹரிப்பிரியா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக உள்ள கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் பல நடிகர் நடிகைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளனர். அந்த வகையில் இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரிப்பிரியா.
தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான மேற்கு மாம்பலத்தில் ஒரு காதல் கதை என்ற தொடரில் நடித்த ஹரிப்பிரியா, சன்டிவியின் வாணி ராணி சீரியல் மூலம் பிரபலமான நடிகர் விக்னேஷ் குமாருடன் காதல் ஏற்பட்டு இருவரும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு சாய் ப்ரித்திவி என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹரிப்பிரியா – விக்னேஷ் குமார் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர். திருமண வாழக்கை இப்படி பாதியில் முடிந்தாலும், ஹரிப்பிரியாவின் சின்னத்திரை வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டிருக்கிறது.
இதுவரை 12-க்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ள ஹரிப்பிரியாவுக்கு சன்டிவியின் ப்ரியமானவள் சீரியல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பிறகு லட்சுமி வந்தாச்சு, கண்மணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ள ஹரிப்பிரியா தற்போது எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஹரிப்பிரியா – விக்னேஷ் குமார் பிரிவதற்கு முக்கிய காரணம் சன்டிவியின் விஜே அசார்தான் என்றும், இவரும் ஹரிப்பிரியாவும் காதலிப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் இதை முற்றிலும் மறுத்துள்ள ஹரிப்பிரியா இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், அசார் என் காதலரோ அல்லது பாய்ப்ரண்டோ இல்லை. என் வாழ்க்கை துணையும் இல்லை மகிழ்ச்சியாக பேசுவது என் உரிமை அதை தவறாக புரிந்துகொள்வது பார்ப்பவர்களின் தவறு என்று என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “