New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/05/atzLPODVhjpM23bsh9LA.jpg)
சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்துள்ள இந்த சிறுமி, தற்போது சன்டிவியின் ஹிட் சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
சின்னத்திரை நடிகைகள் தான் தற்போது இல்லத்தரசிகளின் ஃபேவரெட் நடிகைகளாக இருந்து வருகின்றனர். சீரியல் நடிகைகள் குறித்து எந்த செய்திகள் வந்தாலும், அவர்களை பற்றி புகைப்படங்கள், சிறுவயது புகைப்படங்கள் என அனைத்து பதிவுகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக சிறுவயது புகைப்படம் என்றால் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் பலரும் ஆர்வமாக இருப்பார்கள்.
அந்த வகையில் தற்போது ஒரு சின்னத்திரை சீரியல் பிரபலத்தின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும், சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியல் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. தற்போது எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் பாகத்தில் நடித்து வரும் அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகை ஹரிப்பிரியா இசை தான். இந்த சீரியலில் ஹரிப்பிரியா நந்தினி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
சின்னத்திரையில், ஒரு தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஹரிப்பிரியா இசை, பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு இ.எம்.ஐ ("EMI தவணை முறை வாழ்கை) என்ற தொடரின் மூலம் சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமானார். அதன்பிறகு, பிரியமானவள்", "லட்சுமி வந்தாச்சு", "சரவணன் மீனாட்சி", "கல்யாணம் முதல் காதல் வரை", "விதி" ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார். பல சீரியல்களில் நடித்திருந்தாலும், இவருக்கு எதிர்நீச்சல் தான் அடையாளம்.
சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியலில், நந்தினி என்ற முக்கிய கேரக்டரில் நடித்த ஹரிப்பிரியா இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஹரிப்பிரியாவின் சிறுவயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
எதிர்நீச்சல் சீரியலின் முதல் பாகம் முடிந்தபிறகு புதிதாக நடன பள்ளி தொடங்கிய ஹரிப்பிரியா அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், உடனடியாக தொடங்கிய எதிர்நீச்சல் சீரியலின் 2-ம் பாகத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இந்த சீரியலில் இவரின் கேரக்டர் மற்றும் இவரின் காமெடி வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.