எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நடிகை ஹரிப்பிரியா இசை தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில், ஒரு தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஹரிப்பிரியா இசை, பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு இ.எம்.ஐ ("EMI தவணை முறை வாழ்கை) என்ற தொடரின் மூலம் சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமானார். பிரியமானவள்", "லட்சுமி வந்தாச்சு", "சரவணன் மீனாட்சி", "கல்யாணம் முதல் காதல் வரை", "விதி" ஆகிய சீரியல்களில் நடித்திருந்தார்.
தற்போது சன் டி.வியின் எதிர்நீச்சல் சீரியலில், முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ஹரிப்பிரியா இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் விடுமுறை தினத்தை முன்னிட்டு துபாய் சென்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அடுத்து கடந்த வாரம் காஷ்மீருக்கு வெக்கேஷன் சென்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது ஹரிப்பிரியா வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், கடைசி நாள் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை ஹரிப்பிரியா வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், அவர் எமோஷ்னலாக டைலாக் பேசியிருந்தது பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது. மேலும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதிர்நீச்சல் சீரியலை எங்களால் மற்ற முடியாது. அதிலும் நந்தினி கேரக்டர் எங்களுடன் ஒன்றிப்போய்விட்டது என்று கூறி வருகின்றனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“