Vijay TV Pandian Stores Actress Hema Rajkumar Lifestyle : விஜயடிவியில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹேமா ராஜ்குமார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மகனான ஜீவாவுக்கு ஜோடியான மீனா கேரக்டரில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். அதிலும் இந்த சீரியலில் ஜீவா மீனா இருவருக்கும் இடையேயான ரொமான்ஸ் கட்சிக்கு ரசிகர்கள் பெரிய வரவேற்பை அளித்து வருகினறனர். திருமணமான ஹேமா ராஜ்குமார் கர்ப்பமாக இருந்தபோதிலும் சீரியலில் நடித்து வநதார். மேலும் அவர் பிரசவம் ஆகி 3 மாதங்கள் சீரியலில் நடிக்கமாமல் இருந்தாலும் அவரது கேரக்டருக்கு நடிகை மாற்றம் செய்யாமல் கதை நகர்ந்தது.
சமூக வலைதஙகளில் ஆக்டீவாக இருக்கும் ஹெமா ராஜ்குமார், தனியாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனலில் பெண்களுக்கு தேவையான அழகு, குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல டிப்ஸ்களை வழங்கி வருகிறார். தன்னுள் பல திறமைகளை வைத்துள்ள ஹேமா தொடக்கத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு போகும்போது தனது டஸ்கி ஸ்கின் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் விடாமல் முயற்சி செய்த அவர், தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமடைந்துள்ளார்.
இவரின் இந்த முயற்சிக்கு அவரது குடும்பத்தினர் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வெளிப்படையான கேரக்டரில் நடித்து வரும் ஹெமா திரைப்படம் ஒன்றில் ஒருவரை நம்பவைத்து ஏமாற்றும் வில்லியாக நடித்துள்ளார். ஆனால் இது பலருக்கும் தெரியாத ஒரு உண்மை. அருள்நிதி நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது ஆறாது சினம் திரைப்படத்தில் ஹேமா ராஜ்குமார் நெகடீவ் கலந்த ரோலில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் ப்ரித்வி ராஜ் நடிப்பில் வெளியான மெமரிஸ் திரைப்படத்தில் ரீமேக்கான இந்த படத்தில், அருள்நிதியுடன், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, ராதா ரவி, ரோபோ சங்கர், சார்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்த சில பெண்களால் ஏமாற்றப்படும் ஒரு கல்லூரி பேராசிரியர் சைக்கோவாக மாறி அந்த பெண்களை பழி்வாங்கும் எண்ணத்துடன் அவர்களின் கணவர்களை கடத்தி கொலை செய்வதும் அவரை காவல்துறை எப்படி பிடிக்கிறது என்பதே இந்த படத்தின் கதை.
இதில் பேராசிரியரை ஏமாற்றும் 5 பெண்களில் முன்னணி கேரக்டரில் ஹேமா ராஜகுமார் நடித்திருப்பார். முதலில் வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருந்தாலும் சின்னத்திரையே அவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்துள்ளது. மேலும் வெள்ளித்திரையில் ஒருவரை காதலிப்பது போல் ஏமாற்றும் வில்லி வேடத்தில் நடித்த ஹேமா தற்போது பாண்யன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பங்கள் கொண்டாடும் கேரக்டரில் நடித்து வருகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil