Advertisment

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா புது வீடு ரெடி: என்னென்ன வசதிகள்? வீடியோ டூர்

வெளியுலகிற்கு சென்று டூர் வீடியோ வெளியிடுவதை விட வீட்டில் உள்ள கிச்சன், ப்ரிஜ், பூஜை அறை, உள்ளிட்ட தனித்தனி அறை தொடர்பான டூர் வீடியோ தற்போது அதிகம் வருகிறது.

author-image
WebDesk
Apr 28, 2023 22:00 IST
New Update
Hema rajkumar

பாண்யன் ஸ்டோர்ஸ் நடிகை ஹேமா ராஜ்குமார்

திரைப்பட நடிகைகளை விட தற்போதைய காலகட்டத்தில் சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. சீரியல் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவர்கள் ஆக்டீவாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம். இவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

அந்த வகையில் சமீப காலமாக டூர் வீடியோ மிகவும் பேமஸ் ஆகி வருகிறது. இதில் புதுமை என்னவென்றால் வெளியுலகிற்கு சென்று டூர் வீடியோ வெளியிடுவதை விட வீட்டில் உள்ள கிச்சன், ப்ரிஜ், பூஜை அறை, உள்ளிட்ட தனித்தனி அறைகளில் என்னென்ன பொருட்கள் உள்ளது எப்படி பராமரிக்கிறோம் என்பது தொடர்பான டூர் வீடியோக்களே இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

அதேபோல் சின்னத்திரை நடிகைகள் தங்கள் புதிதாக எதை வாங்கியிருந்தாலும் அது தொடர்பாக வீடியோ போடுவது வீடு கட்டும் வீடியோ கிரகபிரவேஷ வீடியோ உள்ளிட்ட பல வீடியோக்கள் சின்னத்திரை நடிகைகள் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் தற்போது புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.

ஏற்கனவே இந்த வீடு தொடர்பான வீடியோ பதிவு இணயைத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்போது வீட்டின் 90 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டது. இனி கிரகபிரவெஷத்திற்கு வீடு ரெடி என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த வீடியோவில், வீட்டின் கிச்சன், பூஜை அறை, வாஷ் ரூம் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் காட்சிபடுத்தியுள்ளார். மேலும் இன்டீரியர் வேலைகள் முடிந்துள்ளதாகவும் பெயிண்டிங் மற்றும் எலக்ட்ரிஷன் வேலைகள் மட்டும் பேலன்ஸ் இருப்பதாகவும் ஹேமா ராஜ் குமார் வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது யூடியூப் தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Serial Acress Hema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment