பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனாவாக நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் தற்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கூட்டு குடு்ம்பத்தின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைக்கும் இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட் அடித்துள்ளது.
இந்த தொடரில் குடும்பத்தின் 2-வது மருமகளாக நடித்து வருபவர் ஹேமா ராஜ்குமார். இந்த தொடரில் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்கில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது யூடியூப் சேனலில் அழகு சாதனை பொருட்கள் தொடர்பான விளம்பரங்கள் பியூட்டி டிப்ஸ் என வீடியோ வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சேலை கலெக்ஷன்ஸ் என்று இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களாக என்று கேட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“