பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் தனது மகனுடன் கடற்கரை சென்ற வீடியோ பதிவை தற்போது வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மருமகளாகன இவர், வில்லியா அல்லது நல்லவரா என்ற குழப்பம் சீரியலின் தீவிர ரசிகர்களுக்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
நடிப்பு மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் ஹேமாஸ் டைரி என்ற யூடியூப் சேனலில் விழிப்புணர்வு தொடர்பான வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில் தனது மகனுடன் கடற்கரைக்கு சென்ற அனுபவம் தொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். சீரியலில் நடிக்கும்போதே கர்ப்பமாக இருந்த ஹேமாவுக்கு பாண்டியன் ஸ்டடோர்ஸ் சீரியலில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டதும், அவருக்கு பிரசவம் ஆகும் போது சீரியலிலும் பிரசவம் ஆவது போல் காட்டுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வைரலாக பரவியது.
தொடர்ந்து அவ்வப்போது தனது குடும்பம் மற்றும் மகன் சாத்விக் ஆகியோருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கோவளம் கடற்கரைக்கு மகனுடன் சென்ற அனுபவத்தை பகிர்ந்துள்ளார். கடற்கரைக்கு காரில் செல்வது முதல் கடற்கரையில் இருந்து வெளியில் வந்து வீடு திரும்புவது வரை அனைத்தையும் பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவில், முதல்முறையாக கடற்கரையை பார்க்கும் சாத்விக் துள்ளிக்குதித்துக்கொண்டிருக்கிறார். மேலும் நேரம் ஆகிவிட்டது என்று கூறி வீட்டிற்கு அழைக்கும்போது வேண்டாம் இங்கேயே இருக்கலாம் என்று சாத்விக் அடம்பிடிக்கிறார்இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/