scorecardresearch

வெள்ளித்திரைக்கு அடுத்த ஹீரோயின் ரெடிப்பா… ஹேமா ராஜ்குமார் வைரல் க்ளிகஸ்

ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார்.

Hema Rajkumar
ஹேமா ராஜ்குமார்

மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா ராஜ்குமார், அங்குள்ள உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக தனது மீடியாவில் தனது பணியை தொடங்கினார்.  அதன் பின்னர் வசந்த் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். 

தொடர்ந்து விஜய் டிவியில், ஒளிபரப்பான ஆஃபிஸ் சீரியல் மூலம், சின்னத்திரைக்குள் நுழைந்த அவர், பொன்னுஞ்சல், தென்றல், சின்ன தம்பி, குலதெய்வம் மற்றும் மெல்ல திறந்தது கதவு போன்ற பல சீரியல்களில் நடித்தார்.

மேலும் ஆறாது சினம், சவரக்கத்தி, வீரையன் மற்றும் இவன் யார் என்று தெரிகிறதா போன்ற சில படங்களிலும் ஹேமா நடித்துள்ளார். தற்போது  விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த சீரியலில் இவர் வில்லியா அல்லது நல்லவரா என்ற கேள்வி எழுந்து வந்தாலும் மீனா கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில், தனியாக ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இதில் அவர்கள் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial actress hema rajkumar recent photos viral on social