விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஹேமா ராஜ்குமார் தற்போது மலேசியாவில் தனது மச்சானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமானவர் ஹேமா ராஜ்குமார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 2-வது மருமகளாக நடித்து வந்த இவர், வில்லியா அல்லது நல்லவரா என்ற குழப்பம் எப்போதும் இருந்தது. அந்த அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து தற்போது அதன் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/hsa8m0QbGN2PGlGxMQp3.jpg)
முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்துவுடன் ஹேமா ராஜ்குமார் மட்டுமே 2-ம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலிலும் இவர் மீனா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஹேமா ராஜ்குமார் அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல் ஹேமாஸ் டைரி என்ற யூடியூப் சேனலில் அவ்வப்போது சில வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் மலேசியாவில் தனது மச்சானுடன் என நடிகை பாரினாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“