உன் பாய் ப்ரண்ட் ரொம்ப பாவம்; நீ இப்படி பேசுவியோ... சௌந்தர்யாவை கலாய்த்த ஜாக்குலின்: பிக்பாஸ் மெமரீஸ்!

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்ற ஜாக்குலின், 102 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து 6-வது இடம் பிடித்திருந்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்ற ஜாக்குலின், 102 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து 6-வது இடம் பிடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Soundarya and Jacqueline

குரல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டதால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் சௌந்தர்யாவுடன் எனக்கு அதிக நெருக்கம் ஏற்பட்டது. ஆனாலும் அவரையே நான் அதிகம் கலாய்த்திருக்கிறேன் என்று நடிகை ஜாக்குலின் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisment

2014-ம் ஆண்டு விஜய் டிவியில் நடத்தப்பட்ட நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஜாக்குலின் லிடியா. அதே ஆண்டு விஜய் டிவியில் தொடங்கப்பட்ட ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்த இவர், அடுத்து, ஆபீ்ஸ் என்ற சீரியலிலும் நடித்திருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கிய தேன்மொழி பி.ஏ என்ற தொடரில் நாயகியாகவும் நடித்திருந்தார்,

அதேபோல், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்குலின், 2018-ம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தில் அவரின் தங்கை கேரக்டரில் நடித்திருந்தார். அதன்பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்த இவர், சமீபத்தில் வெளியாகி கிவி என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார், இந்த படம் விமர்சனரீதியாக பலரின் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

இதனிடையே கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக பங்கேற்ற ஜாக்குலின், 102 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து 6-வது இடம் பிடித்திருந்த நிலையில், சக போட்டியாளராக இருந்த சௌந்தர்யாவுடன் நெருக்கமான நட்பில் இருந்தார். இது குறித்து டெலி விகடனுக்கு அவர் அளித்த பேட்டியில், சௌந்தர்யா என்னை போல் குரலால் அதிகம் விமர்சிக்கப்பட்டவர் அதனால் அவருடன் எனக்கு நெருக்கம் அதிகரித்தது. பல இடங்களில் நாம் பாடும்போதோ, பேசும்போதோ கிண்டல் செய்துவிடுவார்களோ என்ற பயம் எனக்குள் இருந்துகொண்டே இருக்கும். இதனால் நான் எங்கும் அதிகம் பேசுவதில்லை.

Advertisment
Advertisements

இதேபோன்ற ஒரு சூழ்நிலையில் தான் சௌந்தர்யாவும் இருந்தார். முதல் 2 வாரம் எனக்கு பேச வராது என்று சொல்லிவிட்டு அப்படியே இருந்துவிட்டாள். அவளுக்கு பேச தெரியாது என்று இல்லை. பேசினால் கலாய்ப்பார்கள் என்று நினைத்தக்கொண்டு பேசாமல் இருந்தாள். எல்லோருக்கும் இதுபோன்ற பயம் இருக்கும். இதை கடந்து வருவது மிகவும் கஷ்டம். கலாய்கிறவர்கள் ஜோக்காகத்தான் சொல்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால் இதுவே ஏதோ ஒரு இடத்தில் ஆழமாக பதிந்துவிடும். அதனால் இதை தவிர்ப்பது நல்லது. குரல் மற்றும் உருவ கேலி வைத்து யாரையும் மதிப்பிட போவதில்லை. அதனால் இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், கடந்து சென்றுவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக பேசிய அவர், சௌந்தர்யாவை நான் முதலில் கலாய்த்தேன். இதெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்ய மாட்டார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்த காட்சிகளும் ஒளிபரப்பானது. நாம் பேசியது நல்லாவே இருக்காது நினைத்தோம். அதுக்கெல்லாம் சிரிக்கிறாங்க ஜாக் என்று ரயான் சொன்னான். இதை கேட்ட நான் ஆமான்ட நீ முடி கட் பண்ணது கூட போட்ருக்காங்க என்று சொன்னே். ஒருமுறை நான் சௌந்தர்யாவிடம், உன் வருங்கால பாய் ப்ரண்ட் ரொம்ப பாவம், நீ எப்படி தெரியுமா பேசுவ சுத்தமா புடிக்கல அப்படி சொல்லுவ என்று சொன்னோம்.

இப்படி சொல்லி, நானும் ரயானும் சௌந்தர்யவை கலாய்ப்போம். இதெல்லாம் ஒளிபரப்பானது. சில சமயங்களில் ரொம்ப சீரியஸாக வாழ்க்கையை பார்க்காமல், ஜாலியாக பார்த்தால் அதுவும் ஃபன்னாகத்தான் இருக்கும் என்று ஜாக்குலின் கூறியுள்ளார்.

Tamil Cinema News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: