/tamil-ie/media/media_files/uploads/2023/06/Actress-Jeevitha.jpg)
பிரபல சீரியல் நடிகை ஜீவிதா
தமிழ் சினிமாவில் டான்ஸர் ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்து தற்போது சின்னத்திரையில் வில்லி நடிகையாக அவதாரம் எடுத்துள்ளவர் நடிகை ஜீவிதா.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Jeevitha-9.jpg)
டான்ஸ் மாஸ்டர் ஆக வேண்டும் என்ற முயற்சியில் ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு சென்றபோது அவருக்கு சீரியல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Jeevitha-8.jpg)
டான்ஸ் ஆட வாய்ப்பு கேட்டு போனவருக்கு நடிப்பதற்கே வாய்ப்பு கிடைத்துவிட்ட குஷியில் உற்சாகமாக சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஜீவிதா.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Jeevitha-7.jpg)
அதன்படி 2013-ம் ஆண்டு ஜெயா டிவியின் மனதில் உறுதி வேண்டும் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஜீவிதாவுக்கு அடுத்து ஆபீஸ் சீரியலில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Jeevitha-6.jpg)
இந்த சீரியலில் வில்லி வேடம் தான் என்றாலும் கூட அதிலுமு் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதிலும் இடம் பிடித்து அசத்தினார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Jeevitha-5.jpg)
அதனைத் தொடர்ந்து தேவதை, மெல்ல திறந்தது கதவு, கண்மணி எங்க வீட்டு பொண்ணு உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து சின்னத்திரையின் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Jeevitha-4.jpg)
தற்போது சன்டிவியின் திருமகள் சீரியலில் ஆனந்த வள்ளி என்ற கேரக்டரில் நடித்து வரும் ஜீவிதாவுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Jeevitha-3.jpg)
இதில் கடைக்குட்டி சிங்கம், யானை, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ஜீவிதா தற்போது தனது குடும்பத்துடன் கொல்லி மலைக்கு சுற்றுலா சென்ற புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/Jeevitha-2.jpg)
இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.