Advertisment

அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக்: அண்ணனாக வந்து உதவிய ரஜினிகாந்த்; சீரியல் நடிகை ஓபன் டாக்!

விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான லிவிங்ஸ்டன், அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்தார்.

author-image
WebDesk
New Update
Jovitha Lin

எனது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நடிகர் ரஜினிகாந்த் தக்க சமயத்தில் உதவி செய்தார். அவர் தான் எங்களுக்கு கடவுள் மாதிரி என்று நடிகையும், நடிகர் லிவிங்ஸ்டனின் மகளுமான ஜோவிதா லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.

Advertisment

சினிமாவில் நல்லவர்களாகவும், பிறர் துன்பம் போக்கும் நபராகவும் இருக்கும் நடிகர்கள் பலரும் தங்களது நிஜ வாழ்க்கையில், பிறருக்கு உதவுகிறார்களாக என்றால், அது கேள்விக்குறிதான். அதே சமயம் ஒரு சில நடிகைகள் வெளியில் தெரியும் அளவுக்கு உதவி செய்தாலும், ஒருசிலர் செய்யும் உதவிகள், யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது. அந்த வகையிலான ஒரு நபர் தான் நடிகர் ரஜினிகாந்த்.

வெளியில் தெரியாமல் பலருக்கும் உதவி செய்துள்ள ரஜினிகாந்த, நடிகர் லிவிங்ஸ்டன் மனைவி ஹார்ட் அட்டாக் பாதிப்பில் இருந்தபோது அவருக்காக ரூ25 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார் என்று லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா லிவிங்ஸ்டன் கூறியுள்ளார். சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்று விரும்பிய லிவிங்ஸ்ட்ன், காக்கிச்சட்டை உள்ளிட்ட சில படங்களுக்கு கதை எழுதியுள்ளார்.

தொடர்ந்து விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன் படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவில் அறிமுகமான லிவிங்ஸ்டன், அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து கவனிக்கப்படும் நடிகராக உயர்ந்தார். இடையில் சுந்தர புருஷன் என்ற படத்திற்கு கதை எழுதி அந்த படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றிப்படமாகவும் அமைந்திருந்தது.

அதேபோல் பூவே உனக்காக சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஜோவிதா லிவிங்ஸ்டன், அடுத்து அருவி சீரியலில் நடித்திருந்தார். சமீபத்தில் ஒரு பேட்டியில் தனது அம்மா பற்றி பேசிய ஜோவிதா லிவிங்ஸ்டன், சீரியலில் நாயகனனுடன் ரொமான்ஸ் கட்சியில் நடித்துக்கொண்டிருந்தபோது, எனது அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் என்று எனக்கு போன் வந்தது. அதை கேட்டதும் நான் அங்கிருந்து கிளம்பி மருத்துவமனைக்கு சென்றுவிட்டேன்.

என் அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று தெரிந்தவுடன், நடிகர் ரஜினிகாந்த், எங்களுக்கு ரூ25 லட்சம் கொடுத்தார். அதை எனது அப்பா வேண்டாம் என்று சொன்னாலும், நான் ஒரு அண்ணனாக கொடுக்கிறேன் வாங்க மாட்டாயா என்று உரிமையாக பேசினார். அதன்பிறகு, எனது அப்பா ரஜினிகாந்த் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டார். அவர் பலருக்கும் உதவி செய்துள்ளார். ஆனால் அது வெளியில் தெரியாது என்று ஜோவிதா கூறியுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

tamil cinema actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment