விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சுஜித்ரா. தொடக்கத்தில் இந்த சீரியல் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் போக சுஜித்ராவின் இயல்பான நடிப்பில் மூலம் ரசிகர்கள் மனதில் பெரிய வரவேற்பை பெற்றது.
Advertisment
Advertisment
Advertisements
கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வாழ்க்கை தொடர்பான சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் நடந்த சில வாரங்களாக நாள்தோறும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த இதனால் சீரியலுக்கான டிஆர்பி ரேட்டிங்கும் உயர்ந்து வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதனிடையே நடிப்பு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் சுஜித்ரா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சுஜித்ராவுக்கு உண்டான ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.