சினிமா நடிகைகளை விட தற்போது சீரியல் நடிகைகளுக்க நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் குறுகிய காலத்திலேயே திரைத்துறையிலும் தங்களுக்கென தனி இடத்தை பெற்று விடுகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரையின் பாண்டியன் ஸ்டோஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதற்கு முன்பு சில சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது.

பாண்டியன ஸ்டோர்ஸ் சீரியலில் முதலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா திடீரென மரணமடைந்ததால், காவியா அறிவுமணி முல்லை கேரக்டரில் நடித்து வந்தார். விஜே சித்ராவின் இடத்தை இவர் சரியாக பூர்த்தி செய்தார் என்றும் ரசிகர்கள் பாராட்டினர்

நல்ல வரவேற்பை பெற்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்’து காவியா திடீரென விலகுவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், அவருக்கு பதிலாக வேறொரு நடிகை தற்போது முல்லையாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்திய காவிய சீரியலில் இருந்து விலகிய பின் ஆர்கிடெக்ட் பட்டம் பெற்றார். தமிழில் தற்போது சில படங்களில் நாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. அவர்களை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் காவியா சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.


அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவரு வழக்கம். அந்த வகையில் தற்போது காவியா கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“