விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் காவியா அறிவுமணி. இந்த சீரியலில் முதலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா திடீரென மரணமடைந்ததால், காவியா அறிவுமணி முல்லை கேரக்டரில் நடித்து வந்தார்.
Advertisment
ஆனால் சமீபத்தில் தற்போது காவியாவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகிவிட்டார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்கிடெக்ட் படிப்பில் பட்டம் பெற்றார்.
Advertisment
Advertisements
இதற்காக ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், தற்போது காவியா தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
சீரியலில் இருந்து விலகிவிட்டாலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் காவியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம் என்று இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“