Advertisment

எல்லை மீறிய கவர்ச்சி... காவ்யா இப்படி இறங்கிட்டாரே! வைரல் போட்டோஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த காவ்யா அறிவுமணி க்ளாமர் புகைப்படங்கள்.

author-image
WebDesk
New Update
Kaavya arivumani

காவ்யா அறிவுமணி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் சீசனில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த நடிகை காவ்யா அறிவுமணி, தற்போது வெளியிட்டுள்ள க்ளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தயீல் கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ், ஸ்டாலின் முத்து, சுஜிதா தனுஷ், வெங்கட், குமரன், ஹேமா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 5 வருடங்களுக்கு அதிகமாக ஒளிபரப்பானது. மேலும் பல மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டு அங்கேயும் ஹிட் அடித்தது.

Kaavya Ar

Kaavya Ar

இந்த சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து வந்தவர் தான் வி.ஜே.சித்ரா. ஒரு கட்டத்தில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து அவருக்கு பதிலாக முல்லை கேரக்டரில் நடிக்க வந்தவர் தான் காவ்யா அறிவுமணி. சித்ரா இடத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்திய இவர், சில மாதங்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறினார்.

Kaavya Ar

சினிமாவில் பட வாய்ப்பு அதிகரித்ததால் காவ்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், மிரள் மற்றும் ரிபப்பரி ஆகிய படங்களில் நடித்த காவ்யா அறிவுமணி சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார், இதில் அவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருவது வழக்கம்.

Kaavya Ar

Kaavya Ar

அந்த வகையில் தற்போது அவர் அளவுக்கு அதிகமாக க்ளாமர் உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் உண்மையாகவே இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை தானா? இப்படி கவர்ச்சியில் இறங்கிட்டாரே என்று கேட்டு வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actress Kaviya Arivu Mani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment