New Update
/indian-express-tamil/media/media_files/BnwhUdJWBsmGGS4s2iyE.jpg)
கண்மணி மனோகரன் - அஸ்வத்
சீரியல் நடிகை கண்மணி மனோகரன் சீரியல் நடிகர் அஸ்வத் ஆகியோரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கண்மணி மனோகரன் - அஸ்வத்
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் பிரலமாகி ஜீ தமிழின் அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் நடித்திருந்த நடிகை கண்மணி மனோகரனுக்கு பிரபல நடிகர் அஸ்வத்துடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்த பாரதி கண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, இந்த சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் கண்மணி மனோகரன் (ஸ்வீட்டி). இவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது.
ஒரு கட்டத்தில் கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்அடுத்து ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதோடு மட்டுமல்லாமல் ஜீ தமிழில் சூப்பர் குயின் என்ற ரியாலிட்டி ஷோவில் தனது அம்மாவுடன் பங்கேற்ற கண்மணி மனோகரன், அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், கண்மணி அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே கண்மணி தற்போது தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக கூறியுள்ளார்.
சன் டிவியின் மிஸ்டர் மனைவி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் அஸ்வத், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், சீரியல் நடிகராகவும் வலம் வருகிறார். இதில் காலை வணக்கம் மற்றும் ரஞ்சிதமே நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்றது. இவருக்கும் கண்மணி மனோகரனுக்கும் தற்போது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையில் முக்கிய பிரபலங்கள் மற்றும் நடிகைகள் பங்கேற்றுள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கண்மணி மற்றும் அஸ்வத் இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.