இது மாற்றத்திற்கான நேரம்... கண்மணியின் லேட்டஸ்ட் க்ளிக்

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கண்மணி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கண்மணி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

author-image
WebDesk
New Update
இது மாற்றத்திற்கான நேரம்... கண்மணியின் லேட்டஸ்ட் க்ளிக்

பாரதி கண்ணம்மா என்ற சீரியலில், அறிமுகமாகி தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர் கண்மணி மனோகரன் (ஸ்வீட்டி).இந்த சீரியலில் முதன்மை கேரக்டரான கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பெற்றவர்தான் கண்மணி மனோகரன்.

Advertisment
publive-image

தொடக்கத்தில் கண்ணம்மாவுக்கு எதிரான வில்லத்தனம் செய்யும் கேரக்டரில் அறிமுகமான இவர், அதன்பிறகு திருந்தி நல்லவராக தனது அக்கா கண்ணம்மாவுக்கு உதவும் கேரக்டரில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

publive-image
Advertisment
Advertisements
publive-image

இந்நிலையில், சமீபத்தில் கண்மணி மனோகரன் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து திடீரென விலகுவதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் மற்றொரு பிராஜக்டில் சந்திப்போம் என்று கண்மணி அப்போது தெரிவித்திருந்தார்.

publive-image

அதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழில் அமுதாவும் அன்னலட்சுமியும் என்ற என்ற சீரியலில் முதன்மை கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

publive-image

மேலும் ஜீதமிழின் சூப்பர் குயின் என்ற நிகழ்ச்சியில் தனது அம்மாவுடன் பங்கேற்று வந்த கண்மணி அந்த நிகழ்ச்சியின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தார்.

publive-image

சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் கண்மணி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Kanmani Manoharan

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: