New Update
/indian-express-tamil/media/media_files/DeIg3I8a4Hokl8t9ujC8.jpg)
நடிகை கண்மணி மனோகரன்
தமிழ் சின்னத்திரையின் முன்னணி நடிகையாக வலம் வரும் கண்மணி மனோகரன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது
நடிகை கண்மணி மனோகரன்
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்தது பாரதி கண்ணம்மா. கணவன் மனைவி சந்தேகத்தின் அடிப்படையை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றது.
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் தங்கை அஞ்சலி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் கண்மணி மனோகரன். முதல் சீரியலாக இருந்தாலும் வில்லி ரோலில் சிறப்பாக நடித்திருந்தார்.
தோழி ஒருவருடன் ஆடிஷனுக்கு போனபோது இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. முதல் சீரியல் வில்லி என்றாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
பாரதி கண்ணம்மா கண்மணிக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால் சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்க அதிர்ச்சி அளித்தார்.
பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய கண்மணி,அடுத்து எந்த சீரியலில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில், தற்போது ஜீ தமிழின் ’அமுதாவும், அன்னலட்சுமியும்’ சீரியலில் நடித்து வருகிறார்.
வாத்தியாரை திருமணம் செய்துகொண்ட அமுதாவுக்கு தற்போது படிக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், அவரது திருமண வாழ்க்கைக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பதே இந்த சீரியலின் கதை
இன்ஸ்டாவில் மட்டும் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் அதிகமானோர் ஃபாலோயர்களை வைத்துள்ள கண்மணி, அடிக்கடி தன்னுடைய போட்டோஷூட் படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.