சொன்னா நம்ப மாட்டீங்க… எப்படி இருந்த சீரியல் நடிகை இப்படி ஆயிட்டார்!

Actress Karthika Laddu Tamil News : பிரபல சீரியல் நடிகை கார்த்திகா லட்டு தனது புகைப்படங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Television Actress Karthika Laddu Viral Video : தமிழில் தற்போது பெரியத்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகளுக்கே அதிக வரவேற்பு உள்ளது. அதற்கு ஏற்றாற்போல் சின்னத்திரை நடிகைகளும் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதில் பல பதிவுகள இணையத்தில் வைரலாகி வருவதும் தொடர்ந்து வருகிறது. இதில் ஒரு சில நடிகைகள் சீரியலில் இருந்து வெளியேறிவிட்டாலும், சமூகவலைதளங்கள் மூலம் தங்களை ரசிகர்கள் மத்தியில் நிலைநிறுத்திக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நடிகைகளில் ஒருவர் கிருத்திகா லட்டு . சின்னத்திரையில் தனது சிறந்த நடிப்பின் மூலம் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய அவர்,  சின்னத்தரையில் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான திருமுருகன் இயக்கிய “தேன் நிலவு”சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.  அதனைத் தொடர்ந்து  ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியலில் மீனு குட்டி (மீனாட்சி) என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தது பெரிதும் பேசப்பட்டது.

தொடர்ந்து சன் டிவியில் 5 வருடங்கள் ( ஜனவரி 2012 முதல் செப்டம்பர் 2017 வரை) ஒளிபரப்பான பைரவி- ஆவிகளுக்கு பிரியமானவள் என்ற மர்மத்தொடரில், ஜீவா என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்ற இவர், சென்னை 28 திரைப்படத்தின் 2-ம் பாகமான சென்னை 28 – 2 படத்தில்  நடிகர் நிதின் சத்யாவின் மனைவியாக நடிகை நடித்து தனது வெள்ளித்திரை பயணத்தை தொடங்கினார்.

இந்நிலையில்சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் நடிகை கார்த்திகா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது  கடந்த கால புகைப்பட்ங்கள் சிலற்றுடன், தற்போது எடுக்கப்பட்ட ஸ்டைலிஷ் லுக்குடன் கூடிய புதிய புகைப்படங்களை இணைத்து ஒரு வீடியோவாக “ஜோக்கர் இப்போ ஹீரோயின் ஆன தருணம்” என்று கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவின் பிண்ணனியில், இசையமைப்பாளர் அனிருத் குரலில் டேமேஜான பீஸு நானு, ஜோக்கர் இப்போ ஹீரோ ஆனேன் பாடலை ஒலிக்க செய்துள்ளார்.

ஆனால் இந்த வீடியோவில் முதலில் வரும் கார்த்திகாவின் புகைப்படங்களை பார்க்கும்போது இது அவர்தான என்று கேட்கும் அளவுக்கு  அதிக எடையில் உள்ளார். தொடர்ந்து  அவர் தனது பதிவில், மிகவும் குண்டாக தான் இருந்த நேரத்தில் கர்ப்பமாகி இருந்தேன். அதன்பிறகு மறுபிறப்பு எடுத்தது போன்று நான் புதிதாக என்னை மீண்டும் உருவாகினேன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த வீடியோவில் சேர்த்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் குண்டான எனது தோற்றம் அடங்கிய புகைப்படத்தை உங்களில் எத்தனை பேர் பார்க்க விரும்புகிறீர்கள்?என்று கேப்ஷனில் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதான் என் வாழ்வில் மறக்க முடியாத நாட்கள் தற்போது இருக்கும் உருவத்தில் மாற்றிக் கொள்ள எவ்வளவு கடினமான பயணம் செய்திருப்பேன் என்று குறிப்பிட்டுள்ளார். உடல் எடை காரணமாக அதிக மனஅழுத்தம், அதிக கிண்டலை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் கூறியுள்ள அவர் ஓ மை காட், போதும் டா சாமி என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress karthika laddu posted video instagram viral

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com