Actress Kashthuri Twitter Post About Real Kannamma : விஜய் டிவியின் முக்கிய ஹிட் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. நாளுக்கு நாள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முக்கிய இடம்பிடித்து வருகிறது. இந்த சீரியலில் பாரதி, கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கண்ணம்மா கர்ப்பமடைகிறாள். ஆனால் தனக்கு ஆண்மை இல்லை என்று அவனது தோழியும் கதையின் முக்கிய வில்லியுமான வெண்பா சொன்னை கேட்டு அதிர்ச்சியடையும் பாரதி, கண்ணாம்மா குழந்தைக்கு தான் அப்பா இல்லை என்று அவளை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான்.
ஆனால் வைராக்கியமாக கண்ணம்மா தனது குழந்தைக்கு டாக்டர் பாரதிதான் அப்பா என்பதை நிரூப்பேன் என்று சபதமெடுத்து அதற்காக போராடுவது போன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், நிஜத்தில் தற்போது 65 வயதாகும் இளவரசி என்ற பெண்மணி ஒருவர் 45 ஆண்டுகளுக்கு பிறகு தனது குழந்தையின் அப்பா யார் என்பதை டிஎன்ஏ டெஸ்ட் மூலம் நிரூபித்துள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னையின் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த இளவரசி விஜயகோபாலன் எண்பரை திருமணம் செய்துகொண்டார். திருணம் முடிந்து சில மாதங்கள் இருவரும் ஒன்றாக இருந்தபோது இளவரசி கர்ப்பமாகியுள்ளார். இதை தெரிந்துகொண்ட விஜயகோபாலன் இளவரசியை கைவிட முடிவு செய்து வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு வெளியில் செல்கிறார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதற்கிடைய இளவரசிக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஆனாலும் தனது கணவரை தேடும் பணியில் இளவரசி முழுமூச்சாக களமிறங்கியுள்ளார்.
அப்போதுதான் அவரது கணவர் விஜயகோபாலன் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட நிலையில், காவல்துறையில் உயர் பதவியிலும் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளித்து எந்த பயனும் இல்லாத்தால் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. அதில் விஜயகோபாலன் தான் உண்மையில் தந்தை என்பது நிரூபனமாகியுள்ளது.
தற்போது விஜயகோபாலனுக்கு 72 வயதாகும் நிலையில், இளவரசிக்கு 65 வயதாகிறது. அவரது மகளுக்கு 42 வயதாகிறது. அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். ஒரு சாதாரண பெண்ணின் 45 வருட போராட்டத்திற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டது பதிவில், "தாமதமான நீதியின் ஒரு சோகமான கதை - 'இளவரசி" என்ற பெண்மணி, அவரது வாழ்நாள் முழுவதும் போராடியுள்ளார்; கர்ப்பிணி மற்றும் கணவனால் கைவிடப்பட்டது கணவனும் ஒரு போலீஸ்காரர் என்பதால் போலீசாரிடம் சென்றது கைகொடுக்கவில்லை. 45 வருடங்களுக்குப் பிறகு உண்மை வெற்றி பெற்றது, ஆனால் அவருடைய வாழ்க்கை வீணானது என பதிவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil