Advertisment

பிரபல நடிகரின் படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை : அதிகாரபூர்வ அறிவிப்பு

Tamil Cinema Update : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வரும் காவியா அறிவுமணி தற்போது பிரபல நடிகரின் படத்தில் இணைந்துள்ளார்

author-image
WebDesk
New Update
பிரபல நடிகரின் படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை : அதிகாரபூர்வ அறிவிப்பு

Pandian Stores Mullai entry In Tamil Cinema : பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகை காவியா அறிவுமணி தற்போது சினிமாவல் என்ட்ரி கொடுக்க உள்ள நிலையில், பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் இவர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

சின்னத்திரையில் குடும்பங்கள் கொண்டாடும் முக்கிய சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியின் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் நடிகைகள் அனைவரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தவிர்க்க முடியாத நடிகையாக வந்தவர் வி ஜே. சித்ரா. முல்லை என்ற கேரக்டருக்கு உயிர்கொடுத்து வந்த அவர் திடீரென மரணமடைந்தார்.

இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த முல்லை யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், காவியா அறிவுமணி அந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானார். தொடக்கத்தில் இவரை முல்லையாக ஏற்றுக்கொள்ளாத ரசிகர்கள் தற்போது அவரது நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், சமீப காலமாக காவியா அறிவுமணிக்கு திரைப்பட வாய்ப்பு வருவதாக தகவல் வெளியானது. அதன்படி கவின் நடிக்கும் ஊர் குருவி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.  

இந்நிலையில், தற்போது காவியா அறிவுமணி மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் இளம்வயது கேரக்டரில் அசத்திய மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் ரிப்பப்பரி என்ற படத்தில் நடிக்க காவியா ஒப்பந்தமாகியுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏ.கே. இயக்கும் இந்த படத்தில், மாஸ்டர் மகேந்திரனுக்கு ஜோடியாக ஆர்த்தி என்ற புதுமுகம் நடிக்கிறார்.  

காவிய அறிவுமணி இந்த படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவருடன், யூடியூப் பிரபலம், மாரி, சூப்பர் டீலக்ஸ் நோபிள் ஜேம்ஸ், நக்சலைட்ஸ் செல்லா தனம் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர். காவிய அறிவுமணி,  தற்போது வரிசையாக திரைப்படங்களில் நடித்து வருவதால் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment