New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/Kvaiya.jpg)
Serial Actress Kaviya : பாண்டியன் ஸ்டோர் சீரியல் நாயகி முல்லையின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்து வரும் காவியா அறிவுமணி தற்போது தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.குடும்ப உறவுகளை பின்னணியாக கொண்ட இந்த சீரியலில், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 3-வது மறுமகள் முல்லையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் காவ்யா அறிவுமணி.
ஏற்கனவே முல்லையாக நடித்த விஜே சித்ரா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது ரோலில் நடிக்க வந்த இவர், அதற்கு முன் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வந்தார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் காவ்யா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது காவ்யா வித்யாசமான மேக்கப்பில் சில புகைப்படங்களை வெளியிட்டார். எப்போதும் இவாரது புகைப்படங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள் தற்போது இவரது புகைப்படதைதை பார்த்து அதிகமாக கலாய்த்து வருகின்றனர். மேக்கப் மிகவும் மோசமாக இருக்கிறது, தலைமுடி அதை விட மோசமாக இருக்கிறது என நெட்டிசன்கள் தொடர் விமர்சனங்கள வைத்து வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.