விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்து தற்போது அந்த சீரியலின் 2-ம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ்குமார் ஆகியோர் தவிர மற்ற அனைவரும் வேறு சீரியல்களில் நடித்து வரும் நிலையில், தற்போது முல்லை கேரக்டரில் நடித்து வந்த லாவண்யா ஜீ தமிழ் சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.
வங்கி ஊழியராக பணியாற்றி வந்த லாவண்யா நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக அதில் இருந்து விலகிய நிலையில். அவர் நடிப்பதற்கு குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன்பிறகு ஒரு வழியாக சம்மதம் பெற்று வாய்ப்பு தேடிய அவருக்கு சிற்பிக்குள் முத்து சீரியலில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தொடக்கத்தில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த நடிகை சித்ரா மரணமடைந்ததை தொடர்ந்து, அவருக்கு பதிலாக காவியா அறிவுமணி முல்லை கேரக்டரில் நடிக்க வந்தார். ஒரு கட்டத்தில் அவரும் விலகியதை தொடர்ந்து, அந்த முல்லை கேரக்டருக்கு நடிக்க வந்தவர் தான் லாவண்யா. இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், சீரியல் முடியும் வரை முல்லை கேரக்டரில் தொடர்ந்து நடித்து வந்தார்.
சமீபத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், உடனடியாக அந்த சீரியலின் 2-ம் பாகம் தொடங்கப்பட்டது. முதல் சீசனில் நடித்த ஸ்டாலின் முத்து மற்றும் ஹேமா ராஜ்குமார் மட்டும் 2-ம் பாகத்தில் நடித்து வரும் நிலையில். சுஜிதா தனுஷ் கலைஞர் டிவி சீரியலில் நடித்து வருகிறார். இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பின் வேறு சீரியலில் கமிட் ஆகாமல் இருந்த லாவண்யா தற்போது ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் கமிட் ஆகியுள்ளார்.
அதே சமயம். லாவண்யா புதிய சீரியலில் கமிட் ஆகியுள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவர் சிறப்பு தோற்றத்தில் தான் நடிக்கப்போகிறார் என்ற தகவல் ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“