சன்டிவியின் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடித்து வந்த நடிகை மதுமிதா, தற்போது எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகியுள்ள நிலையில், தற்போது விஜய் டிவி சீரியலில் கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சன்டிவியின் சீரியல்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியல் சிறப்பாக எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில், கோலங்கள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வந்தார். கனிகா, மதுமிதா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா உள்ளிட்ட பலர் தில் நடித்திருந்தனர்.
கடந்த ஜூன் 8-ந் தேதி எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், அடுத்த சவில நாட்களில் எதிர்நீச்சல் தொடரும் என்று தகவல் வெளியானது. அதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல் இந்த சீரியல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியுள்ள நிலையில், ஜனனி கேரக்டரில் நடித்து வந்த நடிகை மதுமிதா, இந்த சீரியலில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக, நடிகை வி.ஜே.பார்வதி, ஜனனி கேரக்டரில் நடித்து வருகிறார்.
இதனிடையே மதுமிதாவிடம், ரசிகர்கள் பலரும், ஏன், எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகினீர்கள் என்று கேள்வி அடுத்த இன்ஸ்டா லைவ்வில் தெரிவிப்பதாக கூறியுள்ள மதுமிதா, விஜய் டிவி சீரியலில் கமிட் ஆகியுள்ளார். மற்ற சேனல் சீரியலில் நடித்து புகழ்பெற்று பிரபலமான நடிகைளை வோறொரு சேனல் தங்களது சீரியலுக்கு, முதன்மை கேரக்டராக நடிக்க வைக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது மதுமிதா விஜய் டிவி சீரியலில் நடிக்க உள்ளார்.
அவ்வப்போது புதிய சீரியல்களை ஒளிபரப்பி வரும் விஜய் டிவி, தற்போது அய்யனார் துணை என்ற புதிய சீரியலை ஒளிபரப்ப உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள விஜய் டிவி, இந்த சீரியலில் நிலா என்ற கேரரக்டரில் நடிகை மதுமிதா நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சீரியலின் ப்ரமோ விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அய்யனார் துணை என்பதால், இது பக்தி மற்றும் ஆன்மீக தொடராக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“