/tamil-ie/media/media_files/uploads/2023/09/Madhumitha.jpg)
எதிர்நீச்சல் நடிகை மதுமிதா
நடிகை மதுமிதா.எச். கர்நாடகாவில் பிறந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஷானி என்ற தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Madhumitha-H-2.jpg)
அதனைத் தொடர்ந்து புட்டமல்லி, ஜெய் ஹனுமான் உள்ளிட்ட சீரியல்களில் நடித்த மதுமிதா, ஜீ தமிழின் பிரியாத வரம் வேண்டும் என்ற சீரியல் மூலம் தமிழில் அறிமுகமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Madhumitha-H-3.jpg)
இந்த சீரியலில் இவர் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். பிரியாத வரம் வேண்டும் சீரியல் 2020-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், நம்பர் ஒன் காடலு என்ற தெலுங்கு சீரியலில் நடித்து வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Madhumitha-H-4.jpg)
இந்த சீரியல் 2022-ம் ஆண்டு நிறைவடைந்தது. அதன்பிறகு சன்டிவியில் 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Madhumitha-H-5.jpg)
சன்டிவியின் எதிர்நீச்சல் ஜனனி சக்திவேல் என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை மதுமிதா ஆதி குணசேகரனை எதிர்த்து பல ப்ளான்களை போடும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Madhumitha-H-6.jpg)
சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் மதுமிதா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2023/09/Madhumitha-H-7.jpg)
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணைதளதில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.