மீரா மேடம் வேற லெவல் ஆட்டம்… புஷ்பா பாடலுக்கு சீரியல் நடிகையின் வைரல் டான்ஸ்

Tamil Serial Update : சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றீயா மற்றும் சாமி சாமி பாடல் வைரலாகி வருகிறது.

Serial Actress Meera Krishnan Dance Pushpa Song : சமீப காலமாக சினிமா நட்சத்திரங்களை விட சீரியல் நட்சத்திரங்களுக்கே ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். இதற்கு உறுதுணையாக இருக்கும் வகையில் சீரியல்களும் ரசிகர்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் அளித்து வரும் பெரும் ஆதரவை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் சீரில் நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அவர்கள் பதிவிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ் சின்னத்திரையின் முக்கிய நடிகையான மீரா கிருஷ்ணன் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. சமீப காலமாக வெள்ளித்திரையில் ஹிட்டடிக்கும் பாடல்களுக்கு பலர டப்ஸ்மாஷ் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றீயா மற்றும் சாமி சாமி பாடல் பட்டி ரொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது. இந்த பாடலை படல் டப்ஸ்மாஷ் செய்து வெளியிடுகின்றனர். அந்த வகைளில் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அம்மாவாக நடித்து வரும் மீரா கிருஷ்ணன் சாமி சாமி பாடலுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவை சேர்ந்த மீரா கிருஷ்ணன் 3 வயதில் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். மேலும் முறையாக நடன பயிற்சி பெற்றுள்ள இவர், மலையாளம் மற்றும் தமிழில் ஒருசில படங்களில் நடித்துள்ளார் தற்போது தமிழில் பல சீரியல்களில் நடித்து வரும் மீரா தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தன்னை விட வயது அதிகமான நடிகர் தீபக்கிற்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress meera krishnan dance with samy samy song in pushpa movie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com