Serial Actress Myna Nanthini Beauty Secret : சின்னத்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் மைனா நந்தினி. டஸ்கி ஸ்கின் டோனுடன் மதுரைக்கார பெண்ணாக சின்னத்திரையில் அறிமுகமான இவர், தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரின் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மைனா நந்தினி கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
அதன்பிறகு இந்த மன உளைச்சலில் இருந்து மெல்ல மீண்டு வந்த இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குநரும், சீரியல் நடிகருமான யோகேஷ்வரனை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், மைனா நந்திதி படம் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பிஸியாக இருந்து வருகிறார். சமீபத்தரில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
சின்னத்திக்கு வந்த புதிதில், தனது டஸ்கி ஸ்கின் டோனுக்காக அதிக வாய்ப்புகளை பெற்ற நந்தினி, அதன்பிறகு கேமரா மேக்கப் என தனது நிறத்தை மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் பியூட்டி பார்லர் மற்றும் அழகு சிகிச்சை எடுத்தக்கொண்டாலும் கூட ரிசல்ட் ஒன்றும் பெரிதாக வரவில்லை. மேலும் இந்த முறைகளை பின்பற்றிய உடனே ரிசல்ட் தெரியவது முடியாத ஒன்று. ஆனால் தற்போது மைனா நந்தினி முன்பு இருந்ததை விட தனது தொற்றத்தை கலராக மாற்றியுள்ளார்.
இது எப்படி முடிந்தது என்றும், எப்படி செய்ய வேண்டும் என்றும், மைனா நந்தினி தனது யூடியூப் சேனில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஆப்பிள், கேரட், பீட்ரூட் ஆகிய பழங்களில் ஜூஸ்தான் தனது நிற மாற்றத்திற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை எப்படி செய்யவேண்டும் என்று கூறியுள்ள அவர், கேரட், பீட்ரூட், ஆப்பிள் இஞ்சி புதினா இலை எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து வாரத்தில் இரண்டுமுறை குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil