நக்ஷத்திராவைவிட அவங்க மாமியார் டான்ஸ் அழகு: என்னா போட்டி பாருங்க!

சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமாகி பிறகு சீரியல் நடிகையாக உயர்ந்தவர் நட்சத்திரா நாகேஷ்.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் புஷ்பா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 5 மொழிகளில் வெளியான இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஊ சொல்றீயா மாமா மற்றும் வாயா சாமி என்ற இரு பாடல்களும் இணையத்தில வைரலாக பரவி வருகிறது.   

இந்த இரு பாடல்களும் ரசிகர்கள் மட்டும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்கயும் கவர்ந்துள்ளது. இதனால் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் பலரும் இந்த பாடலை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்டு வருகினறன. அந்த வகையில் சின்னத்திரையின் முன்னணி நாயகியாக உள்ள நட்சத்திரா நாகேஷ், தனது மாமியாருடன் வாயா சாமி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

சின்னத்திரையில் தொகுப்பாளாராக அறிமுகமாகி பிறகு சீரியல் நடிகையாக உயர்ந்தவர் நட்சத்திரா நாகேஷ். லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அறிமுகமான இவர், தற்போது விஜய் டிவியின் தமிழும் சரஸ்வரியும் தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் தனது நீண்ட நாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், நட்சத்திரா தற்போது தனது மாமியாருடன் இணைந்து புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள வாயா சாமி பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ பதிவை நட்சத்திரா தனது இன்ஸ்டாகிராம் பககத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamil serial actress nakshathra dance with mother in law pushpa song

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com