கமல்ஹாசனின் தேவர்மகன் மகன் தொடங்கி பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் நடிகை நீலிமா ராணி. தொடர்ந்து திமிரு சந்தோஷ் சுப்ரமணியம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் சிறிய கேரக்டரில் நடித்துள்ளார். இதில் நான் மகான் அல்ல படத்தில் கார்த்தியின் தோழியாக நடித்திருப்பார்.
சினிமாவில் குழந்தை நட்சத்தரமாக நடித்து சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும், நீலிமாவுக்கு அழுத்தமாக கேரக்டர் கிடைத்தது சீரியலில்தான். அதிலும் சன்டிவியின் மிக்பெரிய வெற்றிபெற்ற சீரியலான மெட்டி ஒலி சீரியலில் நடித்தது இவருக்கு பெரிய பாராட்டுக்களை பெற்று தந்தது. தொடர்ந்து தேவயானியுடன் கோலங்கள், ராதிகாவுடன் வாணி ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்திருந்தார்.

சமீபத்தில் வெளியான கவுதம் கார்த்திக்கின் ஆகஸ்ட் 16 1947, படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த நீலிமா ராணி, அடுத்து வெளியாக உள்ள லாரன்சின் ருத்ரன் படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த நீலிமா ராணி, தனது கணவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருப்பதால் பலரும் அவரை தாத்தா என்று கிண்டல் பண்றாங்க என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த விமர்சனங்களை நாங்கள் கண்டுகொள்வதில்லை. அவருக்கு டை அடித்தக்கொள்வதில் விருப்பம் இல்லை. அதே சமயம் எனது கணவர் இயல்பாக இருக்கவே நான் விரும்புகிறேன். இதனால் இது தொடர்பான விமூசங்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை என்று கூறியுள்ளார். இந்த பேட்டி தொடர்பான வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“