சின்னத்திரை சீரியல் நடிகை ஒருவர் தனது கர்ப்பத்தை கணவருடன் இணைந்து வித்தியாசமான வெளியிட்டுள்ள அறிவிப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.
சினிமா நடிகைகளை விட தற்போது சின்னத்திரை நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை பயன்படுத்திக்கொள்ளும் சின்னத்திரை நடிகைகள், தங்களது ஒவ்வொரு அசைவையும் சமூகவலைதளஙகளில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாக இருந்து வருகின்றனர். இதில் அவர்கள் வெளியிடும் சாதாரண பதிவுகள் கூட சில சமயங்களில் பெரிய வைரலாக மாறிவிடும்.
அந்த வகையில் வெளியூர் சுற்றுலா செல்வது, மாடலிங் போட்டோஷூட், ரீல்ஸ் என வெளியிட்டு வரும் நடிகைகள், தங்களது திருமணத்தின்போது புகைப்படங்கள், அதன்பிறகு, கர்ப்பமாக இருக்கும்போது அதை அறிவிக்கும் புகைப்படங்கள் என பல பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதில் திருமணம் மற்றும் கர்ப்பம் தொடர்பான பதிவுகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களும் வரவேற்பும் குவிந்து வருவது வழக்கமான ஒன்று. இதை தற்போது ஒரு சின்னத்திரை நடிகை அனுபவித்து வருகிறார்.
சின்னத்திரையில் பாவம் கணேசன், கல்யாணபரிசு, காயத்ரி, குணா போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நேஹா கெளடா. விஜய் டிவியின் பாவம் கணேசன், சன்டிவியின் கல்யாண பரிசு ஆகிய இரு சீரியல்களும் இவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்றது. இவரது நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்தது. நேஹா கெளா சந்தன் கெளாடா என்பரை திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார்.
இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், தனது தலையில் மாம் என்ற தொப்பியும், கணவர் தலையில் டேட் என்ற தொப்பியும் அணிந்துகொண்டு, கணவரை கட்டிபிடித்தபடி நிற்கிறார். அவரது கணவர் கையில் ஸ்கேன் செய்த போட்டோக்களை காட்டுகிறார். இந்த வித்தியாசமான அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வரும் நிலையில், நேஹா கௌடாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“