/tamil-ie/media/media_files/uploads/2021/03/TRAI-4.jpg)
Tamil serial actress news: சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மிகவும் வரவேற்புப் பெற்ற ஒன்றாக 'யாரடி நீ மோகினி' சீரியல் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஸ்ரீகுமார்,நக்ஷத்திரா, சைத்ரா, பாதிமா பாபு, யமுனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் காதல் மற்றும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், முத்தரசன், வெண்ணிலா கதாப்பாத்திரங்களின் காதல் காட்சிகள் மிகவும் பிரபலம்.
இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை நக்ஷத்திராவுக்கு, சின்னத்திரையில் அறிமுகம் கிடைத்ததே இந்த சீரியல் மூலமாக தான். இருப்பினும், தனக்கு வழங்கப்பட்ட காதாபாத்திரத்தில் மிக எதார்த்தமாக நடித்து பெரும் ரசிகர்கள் பட்டாளத்தையே சம்பாதித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் இவர் அவ்வப்போது பதிவிடும் பதிவுகளுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன.
சமீபத்தில் நக்ஷத்திரா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஸ்லீவ் லெஸ் புடவையில், ஸ்லோ மோஷனில் நடனமாடுகிறார். இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகிறார்கள். அதோடு அவரது ரசிகர்கள்,"வேற லெவல்" "நைஸ்" என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்த மாத துவக்கத்தில், 'யாரடி நீ மோகினி' சீரியலில் வில்லியாக வரும் ஸ்வேதா (சைத்ரா) கதாப்பாத்திரம் இறந்துவிடுவது போல் கட்சிகள் அமைக்கப்பட்டு வெளியாகி இருந்தது. எனவே இந்த சீரியல் விரைவில் முடிந்துவிடும் என்ற செய்தி பரவி வந்தது. இந்த செய்தி குறித்து சீரியல் குழுவினர் இதுவரை எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.