Advertisment

கர்ப்பமான சீரியல் நடிகை... வித்தியாசமான அறிவிப்பு : எப்படி மேடம் யோசிக்கிறீங்க!

விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியில் மூலம் பிரபலமான நடிகை நிஹாரிகா, ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நாயகியாக நடித்த ஆல்யா மானசாவின் அண்ணியாக நடித்திருந்தார்.

author-image
WebDesk
New Update
Serial Actress Niharika

நடிகை நிஹாரிகா

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியல் மூலம் பிரபலமான நடிகை நிஹாரிகா கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியல் நடிகைகள், சீரியல் மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு தங்களது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக அறிவித்து கவனம் ஈர்த்துள்ளார்.

விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியில் மூலம் பிரபலமான நடிகை நிஹாரிகா, ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நாயகியாக நடித்த ஆல்யா மானசாவின் அண்ணியாக நடித்திருந்தார். கலர்ஸ் தமிழில் இதயத்தை திருடாதே சீரியலிலும் நடித்துள்ள நிஹாரிகா அடிப்படையில் ஒரு டான்சர். ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர், விரைவில் முடிவடைய உள்ள வித்யா நம்பர் 1 தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ரஞ்சித் என்பவரை திருமணம் செய்துகொண்ட நிஹாரிகா, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் நடிகை நிஹாரிகா தனது கர்ப்பத்தை வித்தியாசமான முறையில் அறிவித்துள்ளார்.

தனது கணவருடன் வயிற்றில் கை வைத்தது போன்று வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில், குழந்தையின் ஸ்கேன் செய்த ரிப்போர்ட்டை ஹார்ட் வடிவில் எடிட் செய்து சேர்த்து வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Serial Actress
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment